Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் 600 மேற்பட்ட அகதிகள் கடற்பயணம்.!

ஒரே நாளில் 600 மேற்பட்ட அகதிகள் கடற்பயணம்.!

20 ஐப்பசி 2024 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 7369


பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி ஒரே நாளில் அறுநூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் கடல்வழியாக பயணித்துள்ளனர்.

சிறிய படகுகளில் மிக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு கடலில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்ததாக பிரெஞ்சு கடற்படையினர் அறிவித்திருந்தமை அறிந்ததே. அன்றைய நாளில் மொத்தமாக 647 பேர் படகுகளில் ஆங்கிலக்கால்வாயை கடந்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரை 28,204 அகதிகள் இதுபோல் ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது சென்ற 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% சதவீதம் அதிகமாகும்.

அதேவேளை, வியாழக்கிழமை பதிவான குழந்தையின் மரணம், இவ்வருடத்தில் இதுவருடத்தில் பதிவான 45 ஆவது மரணமாகும்.

'இந்த கடற்பயணங்கள் தொடர்ந்தால், உயிரிழப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும்' என பிரித்தானியாவின் Home Office ஊடகப் பேச்சாளர் கவலை வெளியிட்டார்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்