பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வீசத் காத்திருக்கும் நிதி மசோதா புயல்.
21 ஐப்பசி 2024 திங்கள் 06:38 | பார்வைகள் : 3636
பிரதமர் Michel Barnier தலைமையிலான அரசாங்கம் 2025 வது ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், நாடாளுமன்ற நிதிக்குழு தலைவர் Éric Coquerel தலைமையில் விரிவாக ஆராயப்பட்டு, பல சரத்துக்கள் திருத்தப்பட்டு, சில அகற்றப்பட்டு இன்று (21/10) விவாதத்திற்கு வருகிறது.
ஏற்கனவே இந்த அரசின் மீதும், அதன் வரவுசெலவு திட்டத்தின் மீதும் அதிதிருப்தி நாடாளுமன்றத்தில் காணப்படுகிறது அத்தோடு "தங்கள் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை, எனவே நாங்கள் எங்கள் அமைச்சு பொறுப்புகளை திறப்போம்" என அரசாங்கத்தின் இரு பிரதான அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்
இந்த நிலையில் தான் அறிக்கை குறித்த விவாதம் ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2025 வது ஆண்டிற்கான வரவுசெலவு திட்ட அறிக்கை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டால் பிரதமர் Michel Barnier தனக்கு இருக்கும் அதிகாரத்திற்கு உரிய சட்டச் சரத்தான 49.3 வை பயன்படுத்தி அறிக்கையை நிறைவேற்ற எத்தனிக்கலாம் அப்படி நடந்தால் அடுத்த கணமே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லா பிரேரனையை கொண்டு வந்து அரசைக் கவிழ்க்கும் முயற்சி எதிர் கட்சிகளால் கொண்டு வரப்படும், கடந்த தடவை அரசை கவிழ்க்கும் முயற்சியில் அம்மையார் Marine le Pen தயவில் தப்பிய அரசு இம்முறையும் தப்புமா? 'பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வீசக் காத்திருக்கும் நிதி மசோதா புயல்' என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.