Paristamil Navigation Paristamil advert login

வதிவிடம் அனுமதி அற்றவர்களுக்கான மருத்துவ உதவியால் அரசுக்குள் குழப்பம்.

வதிவிடம் அனுமதி அற்றவர்களுக்கான மருத்துவ உதவியால் அரசுக்குள் குழப்பம்.

21 ஐப்பசி 2024 திங்கள் 07:42 | பார்வைகள் : 2662


'L'aide médicale de l'État' (AME) என்பது 'முறையான வதிவிடம் அனுமதி பத்திரங்கள் இல்லாது பிரான்சில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் மருத்துவத்திற்கு அரசு வழங்கும் இலவச மருத்துவ உதவி' இதற்கான நிதியை அரச கஜானாவில் இருந்து அரசு செலவு செய்து வருகிறது அரசாங்கம்.

"இது முறையற்ற வதிவிட வாசிகளை தொடர்ந்தும் இந்த நாட்டில் வாழ்வதற்கு வசதிகள் செய்கிறது இதனை நிறுத்தி அவர்களை நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்" என்னும் கருத்தும், "முறையற்ற வதிவிடவாசிகளின் நோயை முறையாக கட்டுப்படுத்தா விட்டால் நாடு முழுவதும் நோய் தொற்று ஏற்படும்" என்றும் இருவேறு கருத்துக்கள் நீண்ட நாட்களாகவே பிரான்சில் இருந்து வருகிறது. இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட பல சட்டங்கள் பின்னாளில் கைவிடப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில் முறையற்ற வெளிநாட்டவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையை கொண்ட உள்துறை அமைச்சர் Bruno Retailleau மீண்டும் மேற்குறிப்பிட்ட AME எனும் மருத்துவ உதவியை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார் ஆனால், பிரான்சின் சுகாதார அமைச்சர் Geneviève Darrieussecq அதற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் Michel Barnier அவர்கள் Journal du Dimanche எனும் அரச பத்திரிகைக்கு அளித்த செவ்வியல் "AME எனும் மருத்துவ உதவிக்கு செலவாகும் நிதியை குறைத்தே ஆகவோண்டும், ஆனால் அதனை கைவிடக் கூடாது" என தெரிவித்துள்ளார், இந்த கருத்து பிரதமர் எதைச் சொல்ல வருகிறார்? யாரைக் காப்பாற்ற முனைகிறார்? உள்துறை அமைச்சையா? இல்லை சுகாதார அமைச்சையா? என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்