Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய வட கொரியா!

ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய வட கொரியா!

21 ஐப்பசி 2024 திங்கள் 09:26 | பார்வைகள் : 735


உக்ரைன் - ரஷ்ய மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்யாவுக்கு வலுச்சேர்க்கும் விதமாக 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 வருடங்களாக நடத்துவரும் உக்ரைன் போரில் வட கொரியா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் மட்டுமின்றி அதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சறுத்தலாக விளங்கும் அணு ஆயுத நாடு வட கொரியா. 

தற்போது ரஷ்யாவுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெருக்கம் காட்டி வருவது நிலைமையை இன்னும் மோசமாகியுள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ரஷ்யா , சீனா ஆகிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.

இதற்கிடையே சமீபத்தில் தென் கொரியாவை எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்த வட கொரியா அமெரிக்காவுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்