Paristamil Navigation Paristamil advert login

ஜெயம் ரவி இயக்குனராகிறார்.. முதல் பட ஹீரோ ஒரு காமெடி நடிகரா?

 ஜெயம் ரவி இயக்குனராகிறார்.. முதல் பட ஹீரோ ஒரு காமெடி நடிகரா?

21 ஐப்பசி 2024 திங்கள் 09:26 | பார்வைகள் : 280


நடிகர் ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா ஏற்கனவே பிரபல இயக்குனராக இருக்கும் நிலையில், ஜெயம் ரவியும் இயக்குனராக இருப்பதாகவும், அவரது முதல் படத்தில் பிரபல காமெடி நடிகர் ஹீரோவாக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையில் உள்ள பிரபல நடிகர்கள் இயக்குனராகி வருகின்றனர் என்பதும், சமீபத்தில் கூட தனுஷ் இயக்கத்தில் உருவான ’ராயன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

அந்த வகையில் பல வெற்றி படங்களில் நடித்த ஜெயம் ரவி, தற்போது இயக்குனராக இருப்பதாகவும், அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் முதல் படத்தில் நாயகனாக யோகி பாபு நடிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு நடிகராக தமிழ் திரை உலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, இயக்குனராகவும் வெற்றி படங்களை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த 'பிரதர்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் ‘ஜெனி’ மற்றும் ’காதலிக்க நேரமில்லை’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து உள்ளார் என்பதும் இந்த 2 படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்