Paristamil Navigation Paristamil advert login

ஆப்பிள் நிறுவனத்திடம் பிரெஞ்சு விளம்பரதாரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை!!

ஆப்பிள் நிறுவனத்திடம் பிரெஞ்சு விளம்பரதாரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை!!

22 ஐப்பசி 2024 செவ்வாய் 18:24 | பார்வைகள் : 602


ஆப்பிள் நிறுனத்திடம் பிரெஞ்சு விளம்பரதார்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். 

ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய தொலைபேசி, ஐபேட், ஐமேக் போன்ற சாதனங்களில் சஃபாரி எனும் இணைய உலாவியை (Browser) பயன்படுத்தி வருகிறமை அறிந்ததே. அந்த இணைய உலாவி மூலம் இணையத்தளங்களில் வரும் விளம்பரங்களை தடை செய்யக்கூடிய ”Distraction Control” எனும் வசதி ஒன்றை சென்ற iOS 18 இல் அறிவித்திருந்தது. இதன் மூலம் விளம்பரத்தொல்லை இல்லாமல், கவனம் சிதறாமல் இணையத்தளங்களை பார்வையிட முடியும் என ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியினை தான் ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவேண்டும் என பிரெஞ்சு விளம்பரதார முகவர்கள், ஊடகங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன. இந்த விளம்பரங்களின் பின்னால் பல இலட்சம் வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும், அவர்களது வருமானம் பாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியினை ஞாபகம் வைத்திருக்கக்கூடிய cookies வசதியும் இந்த இணைய உலாவியில் இருப்பாதினால் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்