Aulnay-sous-Bois : குழந்தை கடத்தல்.. பெல்ஜியத்தில் தேடுதல் வேட்டை!

23 ஐப்பசி 2024 புதன் 07:29 | பார்வைகள் : 11662
Santiago என பெயரிடப்பட்ட 17 மாதங்கள் வயது கொண்ட குழந்தை ஒன்று Aulnay-sous-Bois பகுதியில் உள்ள l’hôpital Robert-Ballanger மருத்துவமனையில் வைத்து திங்கட்கிழமை இரவு கடத்தப்பட சம்பவம் அறிந்ததே. குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருந்தது குழந்தையின் இளவயது பெற்றோர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தையைக் கடத்திக்கொண்டு அவர்கள் பெல்ஜியத்துக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து பிரெஞ்சு காவதுறையினர் பெல்ஜிய காவல்துறையினருடன் இணைந்து அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெல்ஜிய தேசிய காவல்துறையினர் தேசிய அளவிலான ‘தேடுதல் ஆணை’ பிறப்பித்துள்ளனர்.
23 மற்றும் 25 வயதுடைய பெற்றோர்கள், அவர்களது குழந்தையுடன் எங்கிருந்தாலும் கைது செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Santiago எனும் 17 மாதங்கள் கொண்ட அக்குழந்தை குறைமாத பிரசவத்தில் பிறந்ததாகும். கட்டாய மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், குழந்தையை பெற்றோர்கள் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2