Paristamil Navigation Paristamil advert login

கொலம்பஸ் கண்டுபிடித்த பிரெஞ்சுத் தீவு! - ஒரு சுருக்கமான வரலாறு..!!

கொலம்பஸ் கண்டுபிடித்த பிரெஞ்சுத் தீவு! - ஒரு சுருக்கமான வரலாறு..!!

20 கார்த்திகை 2019 புதன் 10:31 | பார்வைகள் : 18787


பிரான்சுக்கு பல கடல்கடந்த நிலப்பரப்புகள் உள்ளது நீங்கள் அறிந்ததே. பிரான்சின் 101 மாவட்டங்களில் ஒன்று தான் இந்த Guadeloupe தீவு. ஆனால் அது கரீபியன் கடலில் உள்ளது. 
 
இங்கு நான்கு இலட்சத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கின்றனர். பிரதனமாக பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். 
 
இருந்தாலும், இரண்டாம் மொழியாக Antillean Creole மொழியையும் மக்கள் பேசுகின்றனர். இதும் பிரெஞ்சில் இருந்து மருவிய மொழி தான்.
 
இந்த தீவினை Karukera என அழைப்பதுண்டு. அப்படியென்றால் <<அழகிய நீர்த்தேக்கம் கொண்ட தீவு>> என அர்த்தம். இங்கு தண்ணீர் சுவையானதா என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை. 
 
பின்னாளில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் இந்த தீவினை கண்டுபிடித்து அதற்கு Santa María de Guadalupe என பெயரிட்டார். 
 
இத்தீவினை கொலம்பஸ் 1493 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். கன்னி மாதாவின் பெயர் தான் Santa María de Guadalupe என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் பின்னர் ஜெர்மனியா பிரான்சா ஆள்வது என்ற குழப்பம் எல்லாம் ஏற்பட்டு பிரான்சின் காலணி நிலப்பரப்பாக இது மாறியது. பிந்நாட்களில் பிரெஞ்சு மாவட்டமாகவும் மாறியது.
 
இந்த தீவில் முதன் முறையாக குடியேறியது வட, மத்திய அமெரிக்கர்களான இந்தியானா மக்கள் என நம்பப்படுகின்றது. 3000 BC காலப்பகுதியில் இது இடம்பெற்றுள்ளது. அதற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 
 
கொலம்பஸ் தீவினை கண்டறிந்ததன் பின்னரே ஐரோப்பியர்கள் அங்கு குடியேறினர். 
 
***

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்