ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் -காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா...?
23 ஐப்பசி 2024 புதன் 10:16 | பார்வைகள் : 2262
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகக் கொடிய மற்றும் அழிவுகரமான இராணுவ நடவடிக்கைகளாக காணப்படுகின்றது.
ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவரும் இந்த போர் தொடர்பில் வெளியான அறிக்கை ஒன்று, காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப தசாப்தங்கள் எடுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேல் நாளை போரை கைவிடுவதாக அறிவித்தால், காஸா போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவும், அப்போதிருந்த பொருளாதாரத்தை எட்டவும் 350 ஆண்டுகளாகலாம் என்றே நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல் - காஸா போருக்கு முன்னர், 2007ல் ஹமாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், இஸ்ரேலிய மற்றும் எகிப்திய முற்றுகையின் கீழ் காஸா இருந்தது.
மேற்குக் கரையில் ஹமாஸ் படைகளுக்கும் மேற்கத்திய ஆதரவுடைய பாலஸ்தீனிய அதிகாரத்திற்கும் இடையிலான நான்கு முந்தைய போர்கள் மற்றும் பிளவுகள் காஸாவின் பொருளாதாரத்தையும் சிதைத்தன.
தற்போதைய யுத்தமானது பிராந்தியம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது, முழு கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டு, சாலைகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் இடிந்த நிலையில் உள்ளன.
சிதைந்த உடல்கள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் மட்டுமின்றி மலைபோல குவிந்துள்ள இடிபாடுகளை மொத்தமாக மறுகட்டமைப்பு தொடங்குவதற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும்.
ஒக்டோபர் 7 போருக்கு முன்னர். 2007 முதல் 2022 வரையில் காஸாவின் பொருளாதாரம் 0.4 சதவிகிதமாக இருந்துள்ளது.
தற்போது அந்த நிலைக்கு திரும்ப குறைந்தது 350 ஆண்டுகளாகலாம் என்றே கூறப்படுகிறது.
ஆனால் ஹமாஸ் ஆயுதங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்க முற்றுகை தேவை என்றும் காஸாவின் அவலநிலைக்கு காரணம் ஹமாஸ் படைகளே என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.