ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளை எச்சரிக்கும் நெதன்யாகு
23 ஐப்பசி 2024 புதன் 10:20 | பார்வைகள் : 3026
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹமாஸ் தலைவர் சின்வார் மற்றும் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஆகியோர் கொல்லப்பட்டதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலின் மத்திய நகரான சிசேரியாவில்(Caesarea) அமைந்துள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “ என்னையும் என்னுடைய மனைவியையும் கொல்ல ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்டுள்ள முயற்சி மிக பெரிய தவறு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டினார்.
மேலும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் எவரும் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளை குறிப்பிட்டு எச்சரிக்கை நெதன்யாகு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் வீட்டில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்று கொண்டுள்ளது.
அத்துடன் பெய்ரூட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹிஸ்புல்லாவின் செய்தி தொடர்பாளர் மொஹமட் அபிஃப்(Mohammed Afif), கடந்த வாரம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை குறித்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு முழுப் பொறுப்பேற்பதாக அறிவித்தார்.
மேலும் ஹிஸ்புல்லா போராளிகள் சிலரை இஸ்ரேலிய படைகள் சிறைப்பிடித்து இருப்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்துள்ள பிரதமர் நெதன்யாகுவின் வீடு தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.