பிரெஞ்சு பயங்கரவாதியை தேடி பெல்ஜிய காட்டுக்குள் மூன்று நாள் வேட்டை!!
12 கார்த்திகை 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18602
நவம்பர் 13 தாக்குதல் இடம்பெற்று முடிந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சகல புறங்களிலும் தேடுதல் வேட்டை ஆரம்பமாகின. கைரேகைகள் மற்றும் தடயங்களை கொண்டு பயங்கரவாதிகளை அடையாளம் கண்டுகொண்டனர்.
மூன்று முக்கிய பயங்கரவாதிகள் பிரான்சில் இருந்து தப்பிச் சென்று பெல்ஜிய காட்டுக்குள் பதுங்கிக்கொண்டனர். அவர்களை தேடிப்பிடிக்கும் 'மிஷன்' 2016 ஆம் ஆண்டின் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பிரான்சின் RAiD படையினர் மற்றும் பெல்ஜியத்தின் அதிரடிப்படையினர் இணைந்து அதிரடியை ஆரம்பித்தனர்.
மூன்று நாட்கள் இந்த தேடுதல் வேட்டை இடம்பெற்றது. மார்ச் 16, முதலாவது நாளில் குறித்த Brussels நகரின் காட்டுப்பகுதியை அண்மித்துள்ள அனைத்து வீடுகளையும் சோதனையிட்டனர். ஒரு நாள் முழுவதும் தேடினர். ஆனால் பயங்கரவாதிகள் எவரும் சிக்கவில்லை.
இரண்டாம் நாள் மார்ச் 17, பயங்கரவாதிகள் காட்டுக்குள் இருப்பதை கண்டுபிடித்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு அதிகாரிகள் காயமடைந்தனர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் மார்ச் 18 ஆம் திகதி, 'சாலா அப்தெல்சலாம்' எனும் பயங்கரவாதி காட்டுக்குள் இருப்பது தெரியவந்தது. அவனை தேடும் முயற்சி மூன்றாம் நாள் இடம்பெற்றது.
இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற போதும், அவனை உயிரோடு பிடித்தனர். பிடிபடும் போது பலத்த காயமடைந்திருந்தான் சாலா அப்தெல்சலாம்.
பின்னர் பெல்ஜிய அரசு அவனை துருவி துருவி விசாரித்தது. பிரெஞ்சு அரசு அழைத்துக்கொண்டு வந்து துருவியது. நீதிமன்றமும் சிறையும் என பல நாட்களை கழித்தான்.
இடையில் பிரான்சில் இருந்து பெஜியம் அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தி, <<இவனால் பெல்ஜிய காட்டுக்குள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதனால் காடு சேதமடைந்துவிட்டது>> என பத்து வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது.
காட்டை அழித்ததற்கே இந்த தண்டனை என்றால் நாட்டை அழித்த குற்றத்துக்காக பிரெஞ்சு அரசு சும்மா விட்டுவிடுமா என்ன..??!!