மாநில அந்தஸ்து அறிவிப்பு எப்போது ?: அமித்ஷா- ஒமர் அப்துல்லா சந்திப்பு

24 ஐப்பசி 2024 வியாழன் 01:19 | பார்வைகள் : 5734
காஷ்மீர் மாநில அந்தஸ்து தொடர்பாக டில்லி சென்றிருந்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைபிடித்தது. முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார்
பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து இன்று டில்லி சென்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது தேர்தலுக்கு முன் பா.ஜ., அறிவித்துள்ளபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். முன்னர் இருந்த நிலைமை மீண்டும் தொடர வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1