நவம்பர் 13 தாக்குதல்! - உயிரிழந்த தேசத்தவரின் விபரங்கள்..!!

10 கார்த்திகை 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 21260
நவமர் 13 அன்று பரிஸ் மற்றும் புறநகர்களில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தது. இதில் 130 பேர் கொல்லப்பட்டனர். நான்காம் ஆண்டு நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்நாளில், இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்த நவம்பர் 13 தாக்குதல் சர்வதேசத்தையும் கவலைக்குள்ளாக்கியிருந்தது. உயிரிழந்தவர்களும் பல்வேறு தேசத்தவர்கள் தான். இத்தாக்குதலில் அதிகமாக கொல்லப்பட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் தான்.
கொல்லப்பட்ட 130 பேரில் 105 பேர் பிரெஞ்சு காரர். அதன் பின்னர் தென் அமெரிக்கா நாடான Chile நாட்டைச் சேர்ந்தவர்கள் மூவரும், ஸ்பெயின் நாட்டவர் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
பெல்ஜியம், அல்ஜீரியா, போர்துகல், ஜெர்மனி, ருமேனியா, துனுஷியா ஆகிய நாடுகளிலும் தலா இருவர் படியும்,
எகிப்த், இத்தாலி, மெக்ஸிக்கோ, மொராக்கோ, சுவீடன், பிரித்தானியா, அமெரிக்கா, வெனிசுலா ஆகிய நாடுகளிலும் தலா ஒருவரும் கொல்லப்பட்டனர்.
மொத்தமாக 17 நாட்டு குடியுரிமை கொண்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனாலேயே இது சர்வதேச பிரச்சனை ஆனது. இந்த தாக்குதலுக்கு எதிராக பல நாடுகள் கண்டனமும் வெளியிட்டிருந்தன.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1