Paristamil Navigation Paristamil advert login

சிவா விஜய்யை வைத்து படம் இயக்காதது ஏன்?

 சிவா விஜய்யை வைத்து படம் இயக்காதது ஏன்?

24 ஐப்பசி 2024 வியாழன் 11:27 | பார்வைகள் : 348


சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் அவர் அஜித் உடன் ஐந்தாவது முறையாக இணைவார் என்று கூறப்படுகிறது. இப்படியான நிலையில் தற்போது கங்குவா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வரும் சிவா, இதுவரை விஜய்யை வைத்து படம் இயக்காதது ஏன் என்பது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் .

அவர் கூறுகையில், ஏற்கனவே விஜய்யை சில முறை சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவரும் என் இயக்கத்தில் நடிப்பதாகத்தான் சொன்னார். ஆனால் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. அதனால் தான் இதுவரை அவரை வைத்து நான் படம் இயக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்