'anti-juif' வாசகத்துடன் பயணித்த நபர்.. இரு நாட்களின் பின்னர் கைது!!
24 ஐப்பசி 2024 வியாழன் 17:47 | பார்வைகள் : 3643
யூத மதத்துக்கு எதிரானவர் என அர்த்தமாகும் விதத்தில் "anti-juif" எனும் வாசகத்தை அச்சடித்த சீருடை ஒன்றை அணிந்துகொண்டு, மெற்றோவில் பயணித்த ஒருவர் தேடப்பட்டு வந்த நிலையில், இரண்டு நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்சில் மதங்கள் மீதான எதிர்ப்பு மனநிலைக்கு மிக கடுமையான சட்டம் உள்ள நிலையில், யூத மதம் மீது பல்வேறு வகையான எதிர்ப்புகளும், தாக்குதல்களும் பதிவாகி வருகின்றன. அதேபோன்றதொரு வெறுப்பு நிகழ்வு கடந்த திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு Saint-François-Xavier நிலையத்தில் பயணித்த 13 ஆம் இலக்க மெற்றோவில் பதிவானது.
நபர் ஒருவர் "anti-juif" எனும் வாகசத்தினை அச்சடித்த ஜெர்ஸி உடையினை அணிந்து மெற்றோவில் பயணித்துள்ளார். பல்வேறு பயணிகள் அதனை முகச்சுழிப்புடன் பார்வையிட்டுள்ளதுடன், தங்களது கோபத்தினையும் சமூவலைத்தளமூடாக பதிவு செய்தனர்.
அதை அடுத்து குறித்த நபர் தேடப்பட்டு வந்த நிலையில், 48 மணிநேரங்களின் பின்னர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.