திராவிடம் என்ற சொல்லை கேட்டால் சிலருக்கு அச்சம்: முதல்வர் ஸ்டாலின்
25 ஐப்பசி 2024 வெள்ளி 15:37 | பார்வைகள் : 741
திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி எழுதிய திராவிடர் இயக்கமும், கருப்பர் இயக்கமும் என்ற புத்தகத்தை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் நூல் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. பழமைவாத கருத்துகளுக்கு எதிராக முற்போக்கு கருத்துகளை முன்வைக்கிறோம். அடிமைதனத்தை ஒழிக்க உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம். திராவிட நல் திருநாடு என பாடினால் நாக்கு தீட்டாகிவிடுமா?
மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னேற திராவிட இயக்கம் தான் காரணம்.திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கு சம நீதி சமூக நீதியை உறுதி செய்யும்.எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல். அனைத்து துறை அனைத்து மாவட்ட வளர்ச்சியோடு அனைத்து சமூக வளர்ச்சி இருக்க வேண்டும். திராவிடம் என்பது ஒரு காலத்தில் இடப்பெயர், மொழிப்பெயராக இருந்தது. இப்போது அரசியல் பெயராக மாறி உள்ளது.
திராவிடம என்ற சொல்லை கேட்டால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.