Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானிய  மக்களிடையே பரவும் ஸ்கேபிஸ் நோய் 

பிரித்தானிய  மக்களிடையே பரவும் ஸ்கேபிஸ் நோய் 

25 ஐப்பசி 2024 வெள்ளி 16:07 | பார்வைகள் : 521


பிரித்தானியாவில் ஸ்கேபிஸ் (Scabies) நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொற்று சிறிய புழுக்களால் (mites) உண்டாகிறது, அவை தோலின் கீழ் புகுந்து கடுமையான அரிப்பை ஏற்படுத்தி புண்ணாக்கக் கூடியது.

உரிய நேரத்தில் சிகிச்சை பெறாமல் விட்டால், இந்த நோய் மாதங்கள் அல்லது ஆண்டுகள் தொடர்ந்து தொற்று நீடிக்கக்கூடும்.

ஸ்கேபிஸ் முதலில் தோலின் மடிப்புகளில், கை விரல்கள், முழங்கால் மற்றும் இடுப்புகளில் சிறிய சிவப்பு ரேஷ் ஆக தோன்றும். தொடக்கத்தில் இந்த நோயின் முக்கிய அறிகுறி நள்ளிரவில் உடல் முழுவதும் அரிப்பு  ஏற்படும்.

இந்த நோய் அதிகமாக குழந்தைகள், இளம் வயதினரிடையே மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் பரவுகிறது.

சிலருக்கு, குறிப்பாக குறைந்த நோயெதிர்ப்பு திறன் கொண்டவர்களுக்கு, 'crusted scabies' எனும் கடுமையான வடிவம் உருவாகும்.

நோயை சிகிச்சையளிக்க, permethrin அல்லது malathion என்ற anti-parasite lotion லோஷன் உடல் முழுவதும் தடவ வேண்டியது அவசியம்.

இது 8-12 மணி நேரம் தோலில் இருக்க வேண்டும் மற்றும் ஒரு வாரம் கழித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். 

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமாக வாழும் நபர்கள் சிகிச்சை பெற வேண்டியது கட்டாயம், ஏனெனில் நோய் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

மருத்துவர்கள், உடனே சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்துகின்றனர், ஏனெனில் இதை அவமதிப்பதால் நோய் வேகமாக பரவக்கூடும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்