இலங்கையில் முக்கிய சுற்றுலாத்தலத்திற்கு விசேட பாதுகாப்பு

25 ஐப்பசி 2024 வெள்ளி 16:10 | பார்வைகள் : 4674
தம்புள்ளையில் காணப்படும் சுற்றுலாத்தளங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை முதல் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, தம்புள்ளை ரஜமகா விகாரை, தம்புள்ளை உயவத்த ரஜமகாவிகாரை மற்றும் சுற்றுலாத்தளங்கள், உணவகங்கள் என்பவற்றில் விசேடப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.