Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அரபு அமீரக  அரசாங்கம் அறிவித்துள்ள புதிய போக்குவரத்து விதி

ஐக்கிய அரபு அமீரக  அரசாங்கம் அறிவித்துள்ள புதிய போக்குவரத்து விதி

25 ஐப்பசி 2024 வெள்ளி 16:20 | பார்வைகள் : 918


ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் புதிய போக்குவரத்து விதிகளை அறிவித்துள்ளது.

தற்போது 17 வயதுடையவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சாரதி உரிமம் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குறைந்தது 18 வயதுடையவர்களுக்கு மட்டுமே சாரதி உரிமம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

மேலும், அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களை தடை செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட உள்ளது. ஆபத்து அல்லது விபத்துகளைத் தடுப்பதற்குத் தவிர, நகரங்களுக்குள் கார் ஹாரன்களைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


புதிய விதிமுறைகளின் அடிப்படையில் மணிக்கு 80 கிலோமீற்றருக்கு மேல் வேக வரம்புகளைக் கொண்ட சாலைகளில் பாதசாரிகள் கடப்பதை தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மது பானங்கள் அல்லது போதைப் பொருளை உட்கொண்டு வாகனம் ஓட்டுதல், சாலை விபத்து வழக்குகள், நியமிக்கப்படாத இடங்களிலிருந்து சாலையைக் கடப்பது அல்லது வெள்ளத்தின் போது பள்ளத்தாக்கில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அபாயகரமான பொருட்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான சுமைகளை கொண்டு செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று புதிய சட்டம் கூறுகிறது.

அத்துடன், சுய-ஓட்டுநர் மற்றும் மின்சார வாகனங்களின் அதிகரித்து வரும் பயன்பாட்டிற்கு இடமளிக்கும் வகையில் வாகன வகைப்பாடுகளை சரிசெய்யவும் இடமளிக்கப்பட்டுள்ளது.


மேலும், திருத்தப்பட்ட புதிய விதிகள் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்