கனடாவில் கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

26 ஐப்பசி 2024 சனி 10:12 | பார்வைகள் : 4243
கனடாவில் ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காயமடைந்த பெண்ணும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.