Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு என பிரத்யேகமான வாடகை மகிழுந்து சேவைகள்!!

பெண்களுக்கு என பிரத்யேகமான வாடகை மகிழுந்து சேவைகள்!!

1 மார்கழி 2024 ஞாயிறு 14:09 | பார்வைகள் : 4124


தலைநகர் பரிசில் பெண்களுக்கு என பிரத்யேகமான வாடகை மகிழுந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

Uber மற்றும்  Bolt ஆகிய வாடகை மகிழுந்து சேவை மேற்கொள்ளும் நிறுவனங்களே இந்த சேவையை ஆரம்பித்துள்ளன. பெண்கள் தங்களுக்குரிய மகிழுந்துகளை முன்பதிவு செய்ய முடியும் எனவும், பெண் சாரதிகளால் குறித்த மகிழுந்து செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாடகை மகிழுந்து பயன்படுத்தும் பெண்கள் பாலியல் சரண்டல்களுக்கு உள்ளாகுவதால் அதனை தடுக்கும் முகமாக இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்