Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில்  அமுல்படுத்தப்படும் புதிய வாகன சட்டங்கள்

பிரித்தானியாவில்  அமுல்படுத்தப்படும் புதிய வாகன சட்டங்கள்

1 மார்கழி 2024 ஞாயிறு 14:23 | பார்வைகள் : 1624


பிரித்தானியாவில் 01.12.2024  முதல் புதிய வாகன சட்டங்கள் அமுலுக்கு வரவிருக்கின்றன.

இதில் எலக்ட்ரிக் வாகனங்கள் (EV), டீசல், பெட்ரோல் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் HMCR  புதிய Advisory Fuel Rates (AFRs) அமுல்படுத்தியுள்ளது, மேலும் டீசல் கம்பெனி கார்களுக்கு பயணக் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது.


2,000cc மேற்பட்ட டீசல் கார்களுக்கு AFR 18ppm (pence per mile) முதல் 17ppm ஆக குறைக்கப்பட்டுள்ளது.

1,601-2,000cc டீசல் கார்களுக்கு AFR 14ppm முதல் 13ppm ஆக குறைவு.

1,600cc கீழ் டீசல் கார்களுக்கு AFR 12ppm முதல் 11ppm ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிறுவன கார்களின் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

2024 பிப்ரவரி 21 முதல் சர்வதேசப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து புதிய HGV வாகனங்களிலும் "Smart Tachograph 2" பொருத்தப்பட வேண்டும். என்பது சட்டமாகும்.

இப்போது, 2024 டிசம்பர் 31க்குள் பழைய வாகனங்களிலும் இதை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன சார்ஜர் அமைப்பாளர்கள், 8kW அல்லது அதற்கு மேற்பட்ட சக்தி கொண்ட சார்ஜிங் புள்ளிகளில் contactless payment வழங்க தவறினால், சார்ஜர் ஒன்றுக்கு £10,000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், புதிய விதிகள் சார்ஜிங் இடங்களின் 99% செயல்பாட்டு திறனை உறுதிசெய்ய வேண்டும்.

ஜனவரி 1, 2024 முதல், கார் உற்பத்தியாளர்கள் தங்கள் கார் விற்பனையில் குறைந்தது 22% மற்றும் அவர்களின் வேன் விற்பனையில் 10% ZEV ஆணையின் கீழ் முழுமையாக மின்சாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த இலக்கை அடையாத உற்பத்தியாளர்கள் £15,000 அபராதம் செலுத்த நேரிடும்.

இந்த புதிய சட்டங்கள் மாசு குறைப்பை ஊக்குவிக்கவும், வாகன வர்த்தகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்