Paristamil Navigation Paristamil advert login

மருத்துவர் சந்திப்புக்கான கட்டணம் அதிகரிப்பு!

மருத்துவர் சந்திப்புக்கான கட்டணம் அதிகரிப்பு!

2 மார்கழி 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 12678


மருத்துவர்களை சந்திக்க (rendez-vous chez le médecin) செலுத்தப்படும் கட்டணம் இம்மாதம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

பொது மருத்துவரை (chez un généraliste) சந்திக்க இதுவரை 26.50 யூரோக்கள் செலுத்தப்பட்ட இடத்தில் டிசம்பர் 22 ஆம் திகதியில் இருந்து இந்த கட்டணம் 30 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

6 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பார்வையிட 31.50 யூரோக்கள் செலுத்தப்பட்ட நிலையில் அது, 35 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

சிறப்பு மருத்துவ ஆலோசனைகளுக்கான (consultations de spécialistes) கட்டணங்களும் அதிகரித்துள்ளன. உளநல மருத்துவர் கட்டணம் 55 யூரோக்களும், மகப்பேறு மருத்துவர் கட்டணம் 37 யூரோக்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி வழியாக பெறும் ஆலோசனைகளுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அந்த கட்டணம் தொடர்ந்தும் 25 யூரோக்களாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்