நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு வாக்களிக்க வேண்டாம் - கப்ரியல் அத்தால் கோரிக்கை!!
2 மார்கழி 2024 திங்கள் 12:00 | பார்வைகள் : 2473
பாராளுமன்றத்தில் வரவுசெலவு திட்டம் வாசிக்கப்படும் போது, Rassemblement national கட்சியினர் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் கப்ரியல் அத்தால் கோரிக்கை வைத்துள்ளார்.
"மோசமானவர்களின் சோதனைக்கு அடிபணிய வேண்டாம், தங்கள் பேரழிவு திட்டத்தை கைவிட வேண்டும், எனவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம்." என அவர் கோரியுள்ளார்.
"நம்பிக்கை இல்லா பிரேரணையை வைத்துக்கொண்டு 'ஆம் -இல்லை' எனும் விளையாட்டை எதிர்கட்சிகள் விளையாடுவதை விட, வரவுசெலவுத் திட்டத்தில் அவர்கள் காத்திரமாக பங்கேற்றிருக்க வேண்டும்" எனவும் அத்தால் குறிப்பிட்டார்.