வாழைப்பழ பாயாசம்...
2 மார்கழி 2024 திங்கள் 14:26 | பார்வைகள் : 169
தினந்தோறும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சரியான சீராக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட வாழைப்பழத்தை வைத்து பாயாசம் செய்வது குறித்து பார்க்கலாம்.
வாழைப்பழ பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
மலை வாழைப்பழம்,
ஏலக்காய் 5,
சிறிய தேங்காய் 1, சர்க்கரை 100 கிராம்,
முந்திரிப் பருப்பு 10,
நெய் சிறிதளவு.
வாழைப்பழ பாயாசம் செய்முறை:
முதலில் வாழைப்பழங்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்து அதனுடன் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து, சிறிது நேரம் கொதித்தவுடன் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழங்களைப் போட்டு கரண்டியால் மசித்து அனைத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாகக் கொதித்து கெட்டி பதத்திற்கு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி நெய்யில் வறுத்தெடுத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய்ப் பொடியை போட்டு இறக்கினால் சுவையான வாழைப்பழ பாயாசம் தயாராகி வீட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கலாம்.