Noisy-le-Sec : விஷவாயு தாக்கியதில் இருவர் பலி!!
2 மார்கழி 2024 திங்கள் 16:54 | பார்வைகள் : 1519
விஷவாயு தாக்குதலுக்கு இலக்காகி இருவர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை (நவம்பர் 30) இச்சம்பவம் Noisy-le-Sec (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.
Rue de la Dhuys வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். இரு ஆண்கள் சுயநினைவை இழந்து கிடந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு - முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இருந்தபோதும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் monoxyde de carbone விஷவாயு தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டிடத்தில் வசித்த 20 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.