Paristamil Navigation Paristamil advert login

வரவுசெலவுத்திட்டத்தின் முதல் பகுதி.. சமூக பாதுகாப்பு - ”49.3” - கையிலெடுத்தார் பிரதமர்!!

வரவுசெலவுத்திட்டத்தின் முதல் பகுதி.. சமூக பாதுகாப்பு - ”49.3” - கையிலெடுத்தார் பிரதமர்!!

2 மார்கழி 2024 திங்கள் 17:15 | பார்வைகள் : 3008


2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் முதல் பகுதி ஒன்று பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. “சமூக பாதுகாப்பு”க்கான (budget de la Sécurité sociale) முதல் பகுதி வரவுசெலவு இன்று பிற்பகல் முதல் பிரதமரால் வாசிக்கப்பட்டது.

இந்த பகுதியை நிறைவேற்ற பிரதமர் Michel Barnier, 49.3 எனும் அரசியல் சட்டமூலத்தை அறிவித்தார். பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் இந்த சட்டமூலத்தை பிரதமர் அறிவித்ததும், பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் எழுந்தது.

அதை அடுத்து, எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேரணையை (motions de censure) கொண்டுவந்தனர். அடுத்த 48 மணிநேரங்களுக்குள் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பு பாராளுமன்றதில் இடம்பெற வேண்டும். புதன்கிழமை அது இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்