நோர்து-டேம் திறப்புவிழா.. 6,000 பாதுகாப்புபடையினர் குவிப்பு!
2 மார்கழி 2024 திங்கள் 17:38 | பார்வைகள் : 1117
காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 6,000 பாதுகாப்பு படையினர் நோர்து-டேம் தேவாலய திறப்புவிழாவுக்காக பாதுகாப்பு வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலய திறப்பு விழாவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தலைநகர் பரிஸ் இந்த விழாவுக்காக தயாராகி வருகிறது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. திறப்பு விழாவின் போது தேவாலயத்துக்குள் 3,000 பேர் வரை அமர்ந்திருப்பார்கள் எனவும், 40,000 பேர் சென் நதிக்கரையில் கூடியிருப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கிட்டத்தட்ட 50 நாடுகளில் இருந்து பல அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளதாகவும் அறியமுடிகிறது. அதற்கு ஏற்றதுபோல் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நவம்பர் 2 ஆம் திகதி இது தொடர்பில் காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez தெரிவிக்கையில், “வகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்’ என்று எதுவும் இல்லை. எனவே அனைத்து வித தாக்குதல் பொறிமுறைகளுக்கும் நாம் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.