ஒலிம்பிக்கின் போது பயன்படுத்தப்பட்ட தளபாடங்கள்.. குறைந்த விலையில் விற்பனை!!
2 மார்கழி 2024 திங்கள் 18:03 | பார்வைகள் : 7495
ஒலிம்பிக் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட்ட தளபாடங்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மொத்தமாக 54,000 எண்ணிக்கையிலான தளபாடங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அத்தனை தளபாடங்ககும் Emmaüs தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட, அவற்றை இந்த தொண்டுநிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ளது. நவம்பர் 27 ஆம் திகதி சென்றவார புதன்கிழமை முதலாவது விற்பனை Côte-d'Or இல் விற்பனைக்கு விடப்பட்டிருந்தது.
மேசை, poufs எனும் கால் வைக்கும் இருக்கை, கதிரைகள் என பல பொருட்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அங்கு மேலும் பல பொருகள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொண்டுநிறுவனத்தின் இணையத்தளத்தில் இது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan