நாட்டின் புதிய பிரதமர்...???!!
3 மார்கழி 2024 செவ்வாய் 16:43 | பார்வைகள் : 2559
பிரதமர் Michel Barnier இன் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றபோதும், நாட்டின் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும் முயற்சிகளை ஜனாதிபதி மக்ரோன் மேற்கொண்டுவருவதாக அறிய முடிகிறது.
நாட்டின் புதிய பிரதமரை தேடி வருவதாகவும், அப்பட்டியலில் François Bayrou, Sébastien Lecornu போன்றவர்களின் பெயர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாளை, டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகளவு சாத்தியம் இருப்பதாகவும், அதை அடுத்து இந்த புதிய அரசாங்கம் பற்றி ஜனாதிபதி சிந்திப்பதாகவும் பல உள்ளக தரவுகள் தெரிவிக்கின்றன.
Sébastien Lecornu தற்போது பிரான்சின் இராணுவ அமைச்சராக உள்ளமையும், ஜனாதிபதி மக்ரோனுடன் சவுதி அரேபியாவில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.