இலங்கையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

4 மார்கழி 2024 புதன் 09:38 | பார்வைகள் : 4069
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அதன் தலைவர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டார்.
"நாம் நீண்ட கால தீர்வைக் காண வேண்டும், இல்லை என்றால், நாம் மீண்டும் இந்த நெருக்கடிக்கு செல்லலாம். இந்த நெருக்கடியை ஒடுக்குவதற்கு அரிசி சந்தைப்படுத்தல் வாரியம் ஒரு முறையான திட்டத்தை தயாரிக்க வேண்டும், குறுகிய கால தீர்வாக அரசாங்கம் விரைவில் வெளி நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லை என்றால் சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1