Paristamil Navigation Paristamil advert login

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி மாநிலம் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி மாநிலம் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின்

5 மார்கழி 2024 வியாழன் 07:45 | பார்வைகள் : 417


காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் காலநிலை மாற்ற நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், தமிழகம் இந்தியாவிலேயே 3ம் இடத்தில் உள்ளது.

மிகப்பெரிய சவால்

மஞ்சப்பை திட்டத்தால் நெகிழி பயன்பாடு குறைந்துள்ளது. வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மையம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை இரு கண்களாக செயல்படுத்தி வருகிறோம். காலநிலை மாற்றம் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

முன்னோடி

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அலையாத்தி காடுகள் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கிறது. நீர் பாசன குளங்கள் அமைக்கப்பட உள்ளது. வெள்ள அபாயங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. வெப்ப அலையை மாநில பேரிடராக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்