பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியத்தில் உருவான காதல்
5 மார்கழி 2024 வியாழன் 09:14 | பார்வைகள் : 569
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி மிகக் குறைந்த நாளிலேயே உருவாகிவிடும் என்ற நிலையில், இந்த சீசனில் 50 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த ஒரு காதலும் தெரியவில்லை என பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில், தற்போது விஜே விஷால் மற்றும் தர்ஷிகா இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது போல் அவர்களுடைய நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. தர்ஷிகா மற்றும் விஜே விஷால் இருவரும் தனிமையில் உட்கார்ந்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"உன்னை பலமுறை நான் கட்டிப்பிடிக்க வந்தேன். ஆனால் நீ என்னை தவிர்த்து விட்டு போய்விட்டாய்," என்று விஜே விஷால் கூற, அதற்கு தர்ஷிகா "இப்போ எப்படி செய்றேன் தெரியுமா?" என்று கேட்கிறார்.
போன வாரம் கூட உன்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தேன் என விஜே விஷால் கூற, அதற்கு தர்ஷிகா, "அதெல்லாம் பேச்சு கிடையாது. இப்போ என்ன செய்கிறேன் என்று தெரியுமா?" என்று கேட்க, விஜே விஷால் சிரிக்கிறார்.
"இதுவரை எப்படி பண்ணினேன் என்பது முக்கியமல்ல; இப்ப எப்படி பண்றேன் என்பதுதான் முக்கியம்," என்று கூறிய தர்ஷிகா, நான் எல்லோரையும் கட்டிப்பிடிக்கும் போது சைடில் நின்று தான் கட்டிப்பிடிப்பேன். ஆனால் உன்னை மட்டும் நேருக்கு நேராக நின்று கட்டிப்பிடிக்கிறேன், அதை நோட்டீஸ் பண்ணு" என்று சைகை செய்து காட்டுகிறார். அதனை அடுத்து, இருவரும் எழுந்து நின்று திடீரென கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
இந்த கட்டிப்பிடி வைத்தியத்தின் மூலம் காதலை தர்ஷிகா வெளிப்படுத்திய நிலையில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது, இருப்பினும் இந்த கெமிஸ்ட்ரி கடைசி வரை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.