ராணி கமீலாவைச் சந்தித்த முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன்!

5 மார்கழி 2024 வியாழன் 12:56 | பார்வைகள் : 7459
பிரித்தானியாவின் ராணி கமீலா ஹாரீசை பிரான்சின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் நேற்று புதன்கிழமை சந்தித்து உரையாடினார். லண்டனில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பிரான்ஸ்-பிரித்தானியா இணைந்து வழங்கும் இலக்கிய விருது வழங்கும் விழாவில் வைத்து இருவரும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் தனியாக 15 நிமிடங்களுக்கு மேலாக கதைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிஜித் மக்ரோன் புத்தகம் ஒன்றை கமீலாவிடம் வழங்கியதாகவும், நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகள் தொடர்பான புத்தகம் அது எனவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
ராணி கமீலாவுக்கு அண்மைய நாட்களில் உடலநலக்குறைவில் இருந்தமையும், பிரான்சில் அரசியல் தடுமாற்றம் உள்ள பின்னணியிலும் அமைதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1