Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் இணைய விளம்பரம் தொடர்பில் சர்ச்சை

கனடாவின் இணைய விளம்பரம் தொடர்பில் சர்ச்சை

5 மார்கழி 2024 வியாழன் 13:41 | பார்வைகள் : 4365


கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.

இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம் 'ரொயிட்டர்' செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளது.

அகதி அந்தஸ்த்து கோரலை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தினால் இப்பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த 4 மாத இணையவழி விளம்பர பிரசாரத்துக்காக கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இதனைப்போன்ற விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத்தொகையில் மூன்று பங்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச ரீதியில் புலம்பெயர்வோரையும், அகதிகளையும் பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கும் நாடாக இருந்துவரும் கனடாவில் இந்த அறிவிப்பு கனடாவுக்கு செல்வோருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்