தோனியும் நானும் நண்பர்கள் இல்லை- அதிர்ச்சியளித்த முன்னாள் வீரர்
5 மார்கழி 2024 வியாழன் 13:48 | பார்வைகள் : 281
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், கடைசியாக CSKயில் விளையாடும்போது தோனியிடம் பேசியதாக கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளும், 236 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளும் கைப்பற்றியவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh).
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளில் விளையாடிய ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசியாக எம்.எஸ்.தோனியுடன் இணைந்து விளையாடிய ஹர்பஜன் சிங், தற்போது அவருடன் பேசி 10 ஆண்டுகள் ஆவதாக தெரிவித்துள்ளார்.
செய்தி ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன், தனக்கு எம்.எஸ்.தோனியுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், அவரும் நானும் நண்பர்கள் இல்லை என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "CSKயில் விளையாடும்போது நாங்கள் பேசினோம். ஆனால் 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. எனக்கு எந்த காரணமும் இல்லை. ஒருவேளை அவர் பேசுவார். நான் பேசவில்லை.
சென்னை அணியில் நாங்கள் ஐபிஎல் விளையாடும்போது என்ன காரணம் என்று தெரியவில்லை. அதுவும் மைதானத்திற்கு வரவில்லை. அவர் என் அறைக்கு வரவில்லை. எனக்கு அவருக்கு எதிராக எதுவும் இல்லை, அவர் எதாவது கூற வேண்டும் என்றால் என்னிடம் அவர் கூறலாம்" என தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த பேச்சு தோனி மற்றும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.