2024-ல் வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு உகந்த நாடுகள்., மோசமான நிலையில் கனடா, பிரித்தானியா
5 மார்கழி 2024 வியாழன் 14:01 | பார்வைகள் : 517
வெளிநாட்டவர்களுக்கு (Expats) 2024-ஆம் ஆண்டில் வாழ்வதற்கான மிகச் சிக்கனமான மற்றும் அதிக விலைவாசி கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
InterNations நிறுவனம் வெளிநாட்டு வாழ்வாளர்களிடையே நடத்திய ஆய்வின் அடிப்படையில் 53 நாடுகள் கொண்ட இந்தத் தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது.
இது விலைவாசி, நிதி நிலைமை, மற்றும் வசதியான வாழ்க்கைக்கான வருமானத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட மதிப்பீடாகும்.
வெளிநாட்டவர்கள் வாழ உகந்த, சிக்கனமான மூன்று நாடுகள்
1. வியட்நாம் (Vietnam)
இப்பட்டியலில் மூன்றாவது முறையாக வியட்நாம் முதல் இடத்தில் உள்ளது. 86% வெளிநாட்டவர்கள் வியட்நாமின் வாழ்க்கைச் செலவில் மகிழ்ச்சியடைந்துள்ளனர், மேலும் 68% பேருக்கு அவர்கள் பெறும் வருமானம் வாழ்க்கைக்கு போதுமானதாக உள்ளது.
2. கொலம்பியா (Colombia)
கொலம்பியாவின் சுகமான வாழ்க்கை முறையும் குறைந்த செலவினங்களும் 85% வெளிநாட்டவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
3. இந்தோனேசியா (Indonesia)
இந்தோனேசியாவின் குறைந்த விலைவாசி, அமைதியான சூழல், மற்றும் நட்பு பாராட்டும் மக்கள் வெளிநாட்டவர்களின் மனதை கவர்ந்துள்ளது.
இப்பட்டியலில் இந்தியா 6-ஆம் இடத்தையும், பிரான்ஸ் 31-ஆம் இடத்தையும், ஜேர்மனி 37-ஆம் இடத்தையும், சுவிட்சர்லாந்து 39-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் கடைசி மூன்று இடங்களை பிடித்த நாடுகளை, வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு சிரமமான நாடுகளாக எடுத்துக்கொள்ளலாம்.
53. கனடா (Canada)
இப்பட்டியலில் கனடா கடைசி இடத்தில் (53-வது) உள்ளது. கனடாவில் வாழும் வெளிநாட்டவர்கள் கனடாவின் விலை வாசியை Crazy expensive என்று விவரிக்கின்றனர். மிக உயர்ந்த விலைவாசியால் 53% பேருக்கு அவர்களது வருமானம் போதவில்லை.
52. ஃபின்லாந்து (Finland)
இப்பட்டியலில் ஃபின்லாந்து 52-வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு வாழும் வெளிநாட்டவர்களில் 51% பேர் ஃபின்லாந்தின் உயர்ந்த விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
51. பிரித்தானியா (United Kingdom)
பட்டியலில் 51-வது இடத்தில் இருக்கும் பிரித்தானியா, மிக உயர்ந்த விலைவாசியால் 58% வெளிநாட்டவர்கள் மனநிறைவடையவில்லை. மேலும், 37% வெளிநாட்டவர்கள் தங்கள் நிதி நிலைமையை சமாளிக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.
2024-ல் வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு மலிவான மற்றும் மிகவும் விலையுயர்ந்த நாடுகள் (53 நாடுகள்)
1. வியட்நாம்
2. கொலம்பியா
3. இந்தோனேசியா
4. பனாமா
5. பிலிப்பைன்ஸ்
6. இந்தியா
7. மெக்ஸிகோ
8. தாய்லாந்து
9. பிரேசில்
10. சீனா
11. மலேசியா
12. ஓமன்
13. போர்ச்சுகல்
14. ஸ்பெயின்
15. தென் கொரியா
16. எகிப்து
17. கென்யா
18. தென் ஆப்பிரிக்கா
19. போலந்து
20. ஆஸ்திரியா
21. சவுதி அரேபியா
22. செக் குடியரசு
23. பெல்ஜியம்
24. கிரீஸ்
25. சிலி
26. கோஸ்டாரிகா
27. ஹங்கேரி
28. ஹாங்காங்
29. ஜப்பான்
30. இத்தாலி
31. பிரான்ஸ்
32. டென்மார்க்
33. ஐக்கிய அரபு அமீரகம்
34. நெதர்லாந்து
35. லக்சம்பர்க்
36. மால்டா
37. ஜேர்மனி
38. சைப்பிரஸ்
39. சுவிட்சர்லாந்து
40. அவுஸ்திரேலியா
41. அமெரிக்கா
42. சுவீடன்
43. கத்தார்
44. குவைத்
45. துருக்கி
46. பஹ்ரைன்
47. நியூசிலாந்து
48. சிங்கப்பூர்
49. நோர்வே
50. அயர்லாந்து
51. பிரித்தானியா
52. ஃபின்லாந்து
53. கனடா