Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோன் அறிவித்த ஐந்து முக்கிய விடயங்கள்! (ஜனாதிபதி உரை)

ஜனாதிபதி மக்ரோன் அறிவித்த ஐந்து முக்கிய விடயங்கள்! (ஜனாதிபதி உரை)

6 மார்கழி 2024 வெள்ளி 02:52 | பார்வைகள் : 4823


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வியாழக்கிழமை இரவு நாட்டுமக்களுக்கு விசேட உரையாற்றினார். அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட நிலையில், அவரது இந்த உரை மிக அவசியமான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தது. 


கலைப்பு!

ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலின் பின்னர், பிரெஞ்சு நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது தவிர்க்கமுடியாதது. ஆனால் அது புரிந்துகொள்ளப்படவில்லை. அது என்னுடைய பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்தார்.


குடியரசு எதிர்ப்பு முன்னணி!

'நேற்று தீவிர இடதுசாரிகளும் தீவிர வலதுசாரிகளும் ஒற்றுமையாக இணைந்து 'குடியரசு எதிர்ப்பு முன்னணி'யாக' செயற்பட்டனர். நேற்றுத்தான் அவர்களால் ஒன்றிணைய முடிந்தது' என ஜனாதிபதி தெரிவித்தார். நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக Rassemblement national, La France insoumise மற்றும் le Parti socialiste கட்சிகள் இணைந்து வாக்களித்ததை அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.


பதவி விலகல்!

அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. அதற்கு ஜனாதிபதி பதிலளித்தார். 'நீங்கள் ஜனநாயக ரீதியாக என்னிடம் ஒப்படைத்த ஆணை ஐந்தாண்டு கால ஆணை!' என குறிப்பிட்டார். 'நான் இறுதிவரை ஜனாதிபதியாக பணியாற்றுவேன்!' எனவும் அவர் தெரிவித்தார்.


பொதுநல அரசாங்கம்!

'நான் அடுத்துவரும் நாட்களில் பிரதமரை அறிவிப்பேன். அந்த அரசாங்கம் பொதுநலம் சார்ந்த அரசாக அமையும்.  தணிக்கை செய்ய முடியாத, நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆட்படாத அரசாங்கமாக அது அமையும்' என ஜனாதிபதி குறிப்பிட்டார்.


வரவுசெலவு!!

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திடம் இதுவரை உருவாக்கப்படவில்லை. மிஷல் பார்னியே அரசாங்கம் அதனை உருவாக்க முயன்றபோது எதிர்க்கட்சிகளால் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. ”பொது புதிய வரவுசெலவுத்திட்டம் டிசம்பர் நடுப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்பட்டது. புதிய வரவுசெலவுத்திட்டம் 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்படும். இயந்திரரீதியிலான வரிகள் கண்டிப்பாக குறைக்கப்படும்!” என ஜனாதிபதி தெரிவித்தார்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்