இந்தியாவுடன் உறவு மோசமடைய யார் காரணம்?
6 மார்கழி 2024 வெள்ளி 03:10 | பார்வைகள் : 676
இந்தியா உடனான உறவை, ஜஸ்டின் ட்ரூடோ அரசு சரியாக பேணவில்லை என கனடா மக்கள் 39 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மீது ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய துாதரக அதிகாரிகளை அந்நாடு கண்காணித்தது. இதன் காரணமாக, அந்நாட்டிற்கான இந்திய தூதரை மத்திய அரசு திரும்பப் பெற்றது. முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாட்டு உறவு பின்னடைவை சந்தித்து உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக 'அங்கஸ் ரீட் நிறுவனம்(Angus Reid Institute)' மற்றும் கனடாவின் ஆசிய பசுபிக் பவுண்டேசன் அமைப்பு இணைந்து கனடா மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;இந்தியா உடனான உறவை கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ அரசு சரியாக பேணவில்லை என நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு ஆதரவாக 39 சதவீதம் பேரும், எதிராக 32 சதவீதம் பேரும், 29 சதவீதம் பேர் உறுதியாக கூற முடியாது என பதிலளித்து உள்ளனர்.
அதேபோல் 39 சதவீதம் பேர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் ஆக இருக்கும் வரை இரு நாட்டு உறவு மேம்படாது எனவும், 34 சதவீதம் பேர் இந்தியப் பிரதமர் ஆக மோடி இருக்கும் வரை உறவு மேம்படாது எனவும் கூறியுள்ளனர்.