நோர்து-டேம் தேவாலயத்துக்கு கிடைந்த நன்கொடை தொடர்பில் சுவாரஷ்ய தகவல்!!
6 மார்கழி 2024 வெள்ளி 15:25 | பார்வைகள் : 2458
நோர்து-டேம் தேவாலயம் கடந்த 2019 ஆம் ஆண்டு தீவிபத்துக்குள்ளான போது உலகம் முழுவதும் பெரும் அனுதாப அலை எழுந்தது. பெரும் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டிருந்தன. தேவைக்கு அதிகமான பெரும் தொகை பணம் நன்கொடையாக சேர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுள்ளது.
மொத்தமாக 62,000 பேர் நன்கொடை வழங்கியிருந்தார்கள். இதில் 91% சதவீதமானவர்கள் பிரெஞ்சு மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 41% சதவீதமானவர்கள் இல் து பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 9,000 பேர் பரிசைச் சேர்ந்தவர்கள் எனவும், மொத்தமாக 7.8 மில்லியன் யூரோக்களை வழங்கியிருந்தார்கள் எனவும் Hauts-de-Seine மாவட்டத்தில் 4,191 பேர் இணைந்து €2.8 மில்லியன் யூரோக்கள் வழங்கியிருந்தார்கள்.
நாளை, டிசம்பர் 7 ஆம் திகதி கோலாகலமாக நோர்து-டேம் தேவாலயம் திறக்கப்பட உள்ளது.