நோர்து-டேம் : இளவரசர் வில்லியம் வருகை!!
6 மார்கழி 2024 வெள்ளி 15:47 | பார்வைகள் : 2222
நாளை இடம்பெற உள்ள திறப்புவிழா நிகழ்வுக்கு பல்வேறு தலைவர்கள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுடன் பிரித்தானிய இளவரசர் வில்லியமும் வருகை தர உள்ளார்.
நோர்து-டேம் தேவாலயம் கோலாகலமான திறப்புவிழாவுக்கு தயாராகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி (20 ஆம் திகதி பதவியேற்க உள்ள..) டொனால்ட் ட்ரம், தற்போதய முதல் பெண்மணி ஜில் பைடன், இத்தாலியின் ஜனாதிபதி Sergio Mattarella என பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த சிறப்பு விருந்தினர்களின் பட்டியலில் சார்ள்ஸ்-டயானா தம்பதிகளின் மூத்த புதல்வர் இளவசர் வில்லியம்ஸ் இணைந்துள்ளார்.