Paristamil Navigation Paristamil advert login

இண்டியா கூட்டணியை வழி நடத்த தயார்; மம்தா வெளிப்படை!

இண்டியா கூட்டணியை வழி நடத்த தயார்; மம்தா வெளிப்படை!

7 மார்கழி 2024 சனி 05:10 | பார்வைகள் : 544


இண்டியா கூட்டணியை வழி நடத்த தயாராக உள்ளேன்' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

மம்தாவை இண்டியா கூட்டணி தலைவராக்க வேண்டும். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால், காங்கிரஸ் ஏன் தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, இண்டியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை மம்தா பானர்ஜியிடம் ஒப்படைக்கவில்லை?' என திரிணமுல் கட்சியினர் வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்க மாநில செய்தி சேனலுக்கு மம்தா பானர்ஜி அளித்த பேட்டி: நான் தான் இண்டியா கூட்டணியை உருவாக்கினேன். முன்னணியில் இருப்பவர்களால் கூட்டணியை சிறப்பாக வழிநடத்த முடியாது. இண்டியா கூட்டணியை வழி நடத்த தயாராக உள்ளேன். மேற்கு வங்க முதல்வர் பொறுப்பில் இருக்கும் அதேவேளையில் இண்டியா கூட்டணியின் தலைவராகவும், இரட்டை பொறுப்பை நிர்வகிக்க முடியும்.

இரட்டை பொறுப்பு

எனக்கு இண்டியா கூட்டணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், சுமூகமான செயல்பாட்டை நான் உறுதி செய்வேன். நான் மேற்குவங்க மாநிலத்தை விட்டு வெளியே வர விரும்பவில்லை. இங்கிருந்து என்னால் கூட்டணியை வழிநடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்