Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன் பதவி விலக வேண்டும்... - கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவிப்பு!!

மக்ரோன் பதவி விலக வேண்டும்... - கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவிப்பு!!

7 மார்கழி 2024 சனி 07:00 | பார்வைகள் : 2150


அரசாங்கம் தற்போது சந்தித்துள்ள ஸ்திரமின்மை சூழ்நிலையை அடுத்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதவி விலக வேண்டும் என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட பத்தில் ஆறு பேர் (59% சதவீதமானவர்கள்) ஜனாதிபதி பதவி விலகுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.  'ஜனாதிபதி மக்ரோன் பதவி விலகுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?' என கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டது. அவர்களில் 40% சதவீதத்தினர் 'இல்லை' (non) எனவும், 59% சதவீதமானவர்கள் 'ஆம்' (oui) எனவும் ஏனைய 1% சதவீதமானவர்கள் 'கருத்துக்கள் இல்லை' எனவும் தெரிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும் இது சென்ற மாதம்  நவம்பரில் மேற்கொள்ளப்பட்டிருந்த இதே போன்ற கருத்துக்கணிப்பில் பெறப்பட்ட முடிவினை 3 புள்ளிகள் குறைவு எனவும், அந்த கருத்துக்கணிப்பில் 62% சதவீதமானவர்கள் மக்ரோன் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.  

இந்த கருத்துக்கணிப்பை  CNEWS, Europe 1 மற்றும் le JDD ஆகிய ஊடகங்களுக்காக l’institut CSA நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்