Paristamil Navigation Paristamil advert login

உலகின் பாதிப்பேர் ஒலிம்பிக்கை பார்த்து ரசித்துள்ளனர்!!

உலகின் பாதிப்பேர் ஒலிம்பிக்கை பார்த்து ரசித்துள்ளனர்!!

7 மார்கழி 2024 சனி 10:21 | பார்வைகள் : 1107


உலகில் வசிக்கும் மக்கள் தொகையில் பாதிப்பேர் பரிஸ் ஒலிம்பிக்கினை பார்த்து ரசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee (IOC)இன் தலைவர் Thomas Bach, இத்தகவலை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். 2024 பரிஸ் ஒலிம்பிக்கை தொலைபேசி வழியாக கிட்டத்தட்ட 5 பில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். ‘உலக வரலாற்றில் அதிகம்பேரால் பார்வையிடப்பட்ட விளையாட்டு’ இதுவாக பதிவாகியுள்ளது.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு இடம்பெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. கொவிட் 19 பரபரப்புக்குள் அந்த ஒலிம்பிக் போட்டிகள் மறைந்து போயிருந்தன. இந்நிலையில், பரிஸ் ஒலிம்பிக் வழக்கத்துக்கு மாறாக அதிகளவு விளம்பரப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு பார்வையாளரும் சராசரி 9 மணிநேரங்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கூட சென்ற 2022 ஒலிம்பிக்கை விட 20% அதிகமாகும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்