Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பூட்டு தொழிலாளி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி!

பரிஸ் : பூட்டு தொழிலாளி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி!

7 மார்கழி 2024 சனி 18:53 | பார்வைகள் : 1805


கதவுகளில் பூட்டு பதித்து தரும் தொழிலாளி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். வாடிக்கையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் அவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

பரிஸ் 2 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. Rue du Caire வீதியில் உள்ள வீடொன்றுக்கு கதவு திருத்தப்பணிக்காகச் சென்றிருந்த தொழிலாளி ஒருவர், பணி முடிந்ததும் அதற்குரிய கட்டணத்தை கோரியுள்ளார். அவர் கோரிய பணம் அதிகமாக இருந்ததாக வீட்டில் வசித்தவர் கூறியுள்ளார்.

அதை அடுத்து இருவருக்கும் தர்க்கம் ஏற்பட்டது. அதை அடுத்து குறித்த தொழிலாளியை வீட்டில் வசிக்கும் 39 வயதுடைய நபர் கத்தி ஒன்றினால் குத்தியுள்ளார். சில நிமிடங்களில் மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்