Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் : ஜனாதிபதி மக்ரோன் உரை!!

நோர்து-டேம் : ஜனாதிபதி மக்ரோன் உரை!!

7 மார்கழி 2024 சனி 19:30 | பார்வைகள் : 2604


நோர்து-டேம் தேவாலயம் தீவிபத்துக்குள்ளாகி ஐந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது. அதன் திறப்புவிழா உலகத்தலைவர்கள் முன்னிலையில் இடம்பெற்று வருகிறது. 

சற்று முன்னர் ஜனாதிபதி மக்ரோன் உரையாற்றினார். மிகவும் உணர்ச்சிபூர்வமாக அவரது உரை அமைந்திருந்தது.

'பிரெஞ்சுமக்களுக்கு நன்றிக்கடன்!'

'தேவாலயத்தை பாதுகாக உதவிய, மீண்டும் கட்டியெழுப்ப உதவிய அனைவருக்கும் ஜனாதிபதி மக்ரோன் நன்றி தெரிவித்தார். 

ஏப்ரல் 15, 2019 ஆம் ஆண்டு அன்று தேவாலயம் தீவிபத்துக்குள்ளானது. கற்கள், மரங்கள், கூரைகள், ஜன்னல்கள் அனைத்தும் எரிந்தன. தீயணைப்பு படையினர் தீக்குள் குதித்து போராட்டம் நடத்தி தேவாலயத்தை மீட்டனர். 16 காண்டாமணிகளும் உடைந்து விழும் ஆபத்தை தவிர்த்திருந்தனர்!' என நடந்த நிகழ்வுகளை மீட்டினார்.

எங்களுடைய தேவாலயங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆனால் நாங்கள் நம்பிக்கை எனும் பாதையை தேர்ந்தெடுத்து அதனை மீண்டும் கட்டி எழுப்புகிறோம் என தெரிவித்தார்.
**

'நன்கொடையாளர்களுக்கு நன்றி!'

'340,000 பேர் தேவாலயத்துக்காக நன்கொடை வழங்கியுள்ளனர். அவர்களால் இது சாத்தியமானது. அவர்களுக்கு எனது நன்றி எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
**

'Georgelin - நினைவஞ்சலி!'

'தேவாலயத்தை மீள கட்டியெழுப்ப பணிகளை பொறுப்பெடுத்த général Georgelin அவர்கள், 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18 ஆம் திகதி அன்று மரணமடைந்தார். அவரை நினைத்துக்கொண்ட ஜனாதிபதி மக்ரோன், அவருக்கு தனது அஞ்சலியை செலுத்தினார். அத்தோடு பெண்கள் ஆண்கள் என மொத்தம் 2,000 பேர் தேவாலய பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கும் நன்றிகள் என குறிப்பிட்டார்.
**

'மீண்டும் நாம்!'

'தேவாலய மணிகள் ஒலிக்க, உடல் உறுப்புகள் விழித்துக்கொள்ளும்.  மீண்டும் நாம் துடிப்புடன் செயற்பட தேவாலயம் தேவையானது. இந்த தேவாலயத்தின் மகத்துவத்தை பேணி பாதுகாக்க வேண்டும்' என அவர் குறிப்பிட்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்