Paristamil Navigation Paristamil advert login

சீன கல்லூரிகளில் திருமணம் ஆர்வத்தை அதிகரிக்க புதிய திட்டம்!

சீன கல்லூரிகளில் திருமணம் ஆர்வத்தை அதிகரிக்க புதிய திட்டம்!

8 மார்கழி 2024 ஞாயிறு 03:36 | பார்வைகள் : 1106


சீனாவில் கல்லூரிகளில் காதல், திருமணம் தொடர்பில் பாடங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது இளைஞர்களிடையே காதல், திருமணம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் கல்லூரிகளில் காதல் குறித்த பாடங்களை சேர்க்க சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்கள் தொகையில் சீனா முதல் இடத்தில் இருந்த நிலையில் மக்கள் தொகையை குறைக்க கடுமையான சட்டங்களை இயற்றியது.

இதனால் தற்போது மக்கள் தொகை குறைந்துள்ள அதே நேரம் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்களை விட முதியவர்கள் அதிகம் ஆவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

இதனால் தனது மக்களை அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளதுடன், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

சமீபமாக இளைஞர்கள் இடையே காதல், திருமணம் குறித்த எதிர்மறை எண்ணங்கள் உருவாகி வருவதால் சீனாவில் திருமணங்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காதல், திருமணம், குடும்ப உறவு ஆகியவை குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலான புதிய பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்களுக்கு கற்பிக்குமாறு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.   

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்