ஜனாதிபதி மக்ரோனின் பிரபலத்தன்மை அதிகரிப்பு!!
8 மார்கழி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2475
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடந்த சில மாதங்களாக பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில், இந்த டிசம்பர் மாதத்தில் அவரது பிரபலத்தன்மை அதிகரித்துள்ளது.
சென்ற நவம்பர் மாதத்தில் 18% புள்ளிகளை பெற்றிருந்த மக்ரோன், டிசம்பர் மாத ஆரம்பத்தில் 4 புள்ளிகள் அதிகரித்து 22% புள்ளிகளாக அவரது பிரபலத்தன்மை உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பை YouGov எனும் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
அதேவேளை, முன்னதாக 59% சதவீதமான மக்கள் மக்ரோன் பதவி விலகவேண்டும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.