Paristamil Navigation Paristamil advert login

ஜமீன் வீட்டு பெண்ணை கரம்பிடித்தார் காளிதாஸ் ஜெயராம்!!

ஜமீன் வீட்டு பெண்ணை கரம்பிடித்தார் காளிதாஸ் ஜெயராம்!!

8 மார்கழி 2024 ஞாயிறு 11:15 | பார்வைகள் : 563


பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவரை திருமணம் செய்து கொண்டவர் தமிழ்நாட்டின் ஜமீன் வீட்டு பெண் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’, தனுஷ் நடித்த ’ராயன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.

இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி தாரணி காளிங்கராயர் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது இரு வீட்டார் சமாதானத்துடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் இந்த திருமணம் நடந்த நிலையில், திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. மேலும், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காளிதாஸ் மனைவி தாரணி காளிங்கராயர், ஊத்துக்குளி ஜமீன் வாரிசு என்று கூறப்படுவதை அடுத்து, ஜமீன் வீட்டு மாப்பிள்ளையாக காளிதாஸ் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் எளிமையாக நடந்தாலும், மிகவும் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்