சிரியா : 'காட்டுமிராண்டித்தன ஆட்சி வீழ்ந்தது!' - ஜனாதிபதி மக்ரோன்!!
8 மார்கழி 2024 ஞாயிறு 15:27 | பார்வைகள் : 3553
சிரியாவின் கிளர்ச்சிபடைகள் வெகுண்டெழுந்து சர்வதிகார ஆட்சிக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது ஆதரவு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
'காட்டுமிராண்டித்தனமான ஆட்சி வீழ்ந்தது' என மக்ரோன் தெரிவித்தார். அங்கு சுதந்திரமும் அமைதியும் நிலவும் எனவும், சிரியாவின் மக்களது பாதுகாப்புக்காக பிரான்ஸ் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.
"மத்திய கிழக்கில் உள்ள அனைவரின் பாதுகாப்பிலும் பிரான்ஸ் உறுதியாக இருக்கும்" எனவும் மக்ரோன் குறிப்பிட்டார். சிரியாவில் சர்வதிகார ஆட்சியில் உள்ள பஷால் அல் அஷாத் இன் இராணுவப்படைகளுக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது. சிரிய தலைநகர் டமாஸ்கசில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.